Wednesday 30 November 2022

6. வனவாசம் செல்லுதல்



கைகேயி தன் அரண்மனைக்கு தசரதன் அழைத்ததாக கூறி ராமனை வரச்சொன்னாள்.ராமன் வந்து கைகேயின் காலில் விழுந்து ஆசிபெற்று தன் தகப்பனாரைக் காண வந்துள்ளதாகக் கூறினான்.‘உன் தகப்பனார் உன்னை காண விரும்பவில்லை.ஆனால் அவர் கூறச்சொன்னதை சொல்கிறேன்.அதன்படி நீ நடக்கவேண்டும்.’ என ராமனிடம் கூறினாள்.

‘நீங்கள் ஆணையிட்டால் ..அதையே தந்தையின் ஆணையாக ஏற்று அதன்படி செயல்படுவேன்’ என்றான் ராமன்.

‘ராமா’…நீ மரவுரி தரித்து 14 வருடம் வனவாசம் மேற்கொள்ளவேண்டும்.பரதன் இந்நாட்டை ஆளவேண்டும்.; இதுவே உன் தந்தையின் கட்டளை’ என்றாள்.

‘ தாயே உங்கள் கட்டளையை உடனே கடைபிடிக்கிறேன்’ என்று கூறி தன் தாய் கௌசல்யா தேவியிடம் சென்று …..வனவாசம் செல்ல தந்தையார் உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறி ஆசி பெற்றான்.

‘தந்தையின் வாக்கை  நிறைவேற்றுவது  மகனின்  கடமை.எனக்கு விடை கொடுங்கள்’ என்று வேண்ட..கௌசல்யா தேவி கண்ணீருடன் அவனுக்கு ஆசிகள் வழங்கினார்.

ராமன் அம்மாவிடம் தந்தையை  கண்ணும் கருத்துமாக  பார்த்துக்கொள்ளச் சொன்னார்.ராமன் பிரிவை தாங்காத லட்சுமணனும் உடன் வருவதாகக் கூறினான்.ராமன் இருக்கும் இடமே அயோத்தி என சீதாவும் உடன் வருவதாக கூறினாள்

சீதைக்கு எவ்வளவோ புத்திமதிகள் கூறியும் கேட்காமல் வனவாசம் செல்ல உடன்பட்டாள்.

ராமன்,லட்சுமணன்,சீதை என மூவரும் புறப்பட்டனர்.

அவர்கள் ஏறிய ரதம் வேகமாக அயோத்தியை விட்டு சென்றது.

வனவாசத்தின் முதல் இரவை தமஸா  நதிக்கரையில் கழித்தனர்

தசரத சக்கரவர்த்தி துயரில் மூழ்கியவராய்’ கைகேயி’ இனி நான் உன்க்கு உரியவனில்லை.பரதன் என் ஈமச்சடங்குகளை செய்யக்கூடாது’ என்றார்.

அத்துடன் அவர் நா அடங்கிவிட்டது.

தசரதனை கௌசல்யாவின் மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.

தன் வாழ்நாள் முடிவை எதிர்பார்த்து தசரதன் படுத்துக் கிடந்தான்.







Sunday 27 November 2022

4. பரசுராமர் வில்லை வளைத்த ராமன்



 ஜனகனிடம் சிவ தனுசு ஒன்று இருந்தது.அந்த சிவ தனுசை யார் நாண் ஏற்றி துளைக்கிறார்களோ...அவருக்குத்தான் சீதையை மணமுடிப்பேன் என்று சொல்லியிருந்தார் ஜனகர்.

எத்தனையோ நாட்டு இளவரசர்கள் வந்து சிவ தனுசை தூக்கக்கூட முடியாமல் சென்றுவிட்டனர்.

அந்த சமயம் விசுவாமித்திரர் ராம லட்சுமணனுடன் வந்தார்.சீதை ராமரது  அழகைக்க்ண்டு மகிழ்ந்தாள். ராமரும் அப்படியே.

விசுவாமித்திரர்..:ராமா..வில்லை தூக்கிப்பார் என்றார்.ராமர் கையில்  வில்லை எடுத்து நாண் ஏற்றினார்.வில் இரண்டாக உடைந்தது.ஜனகன் மகிழ்ந்து சீதையை ராமருக்கு மணமுடித்தார்.

அத்துடன் தனது  மகள் ஊர்மிளாவை லட்சுமணனுக்கும் ,பரத னுக்கு மாண்டவியையும்,சத்ருக்கனுக்கு சுககீர்த்தியையும் மணம் செய்வித்தார்.

திருமணம் முடிந்து வரும்போது பல துர் நிமித்தங்கள் நிகழ்ந்தன.விசுவாமித்திரர் தசரதனிடம் ஏதோ ஒரு ஆபத்து வருகிறது..ஆனால் அது விலகும் என்று கூறினார்.அப்போது சத்திரியர்களை அழிக்க சபதம் பூண்ட பரசுராமர் எதிரே வ்ந்தார்.

பரசுராமர்,ராமனிடம்..."நீ சிவன் வில்லை வளைத்தது பெரிதல்ல...இது விஷ்ணுவின் வில்,இதையும்வளைத்துக்காட்டு' என்றார்.

ராமர் அந்த வில்லை வாங்கி வளைத்தார்.

'இந்த வில்லுக்கு என்ன இலக்கு' என அவரிடம் கேட்டான்.

தன் பசு,பலன் எல்லாவற்றையும் ராமனுக்கு அளித்து பரசுராமர் அந்த இடத்தை விட்டுச் சென்றார்.

இதனிடையே கைகேகியின் மாமன் தன் பேரன் தன்னுடன் சிறிது காலம் தங்கவேண்டும் என கேட்க ..பரதனும்,சத்ருக்கனும் சேர்ந்து கோசலை நாட்டில் தங்கி இருக்க தசரதர் அங்கு வ்ந்தார்.

Saturday 26 November 2022

3. ஜனகரும்..சீதையும்

 


விசுவாமித்திரர் தன் யாகத்தை துவங்கினார்.ராமரும்  லட்சுமணனும்  யாகத்தை இரவு  பகலாக காவல் காத்தனர்.

சுபாகு,மாரீசன் என்ற இரு  அசுரர்களும் மாமிசம்,இரத்தம் போன்றவற்றை யாகத்தில் இட்டு யாகத்தை அழிக்க முயன்றனர்.ராமன் தன் அம்புகளால் பந்தலிட்டு யாகத்தை  காத்தருளினார். மேலும் மாரீசனை ஓட.ஓட விரட்டி அடித்தார்.சுபாகுவைக் கொன்றார்.யாகம் சிறப்பாக நடந்தது.

விசுவாமித்திரர்...அவர்களை அழைத்துச் செல்லும் வழியில் கௌதமர் எனும் மகரிஷியின் ஆசிரமம் இருந்தது.அங்கு இருந்த கல்லில் அவரது பாதங்கள் பட்டதும்  ..அதுவரை கல்லாய் இருந்த அகலிகை உயிர் பெற்று எழுந்தாள். கௌதமர் அவளை தன் குடிலுக்கு அழைத்துச்சென்றார்.

ராம லட்சுமணரை விசுவாமித்திரர்  மிதிலை நகருக்கு அழைத்துச் சென்றார்.மிதிலையில் மக்கள் வழி நெடுக நின்று ராம,,லட்சுமணர் அழகைக் கண்டு மகிழ்ந்தனர்.

மிதிலை நகரில் மன்னர் ஜனகனுக்கு சீதை என்றொரு மகள் இருந்தாள்.சீதை யாகபூமியை உழுதபோது பூமியிலே தோன்றியவள்.

சீதை திருமண வயது அடைந்தாள்.மன்னன் ஜனகன் ஒரு பந்தயம் வைத்தார்.

Thursday 24 November 2022

2. விசுவாமித்திரர்




தசரதன் மூத்த பிள்ளையான ராமனிடம் அளவற்ற பாசம் வைத்திருந்தான்.

பிள்ளைகள் நால்வரும் வசிஷ்டரிடம் குருகுல வாசம் முடிந்து அயோத்திக்கு வந்தனர்.

ஒருநாள் விசுவாமித்திர மகரிஷி அயோத்திக்கு வந்தார்.தசரதன் அவரை வணங்கி ..'நீங்கள் என் அரண்மனைக்கு வந்தது என் பாக்கியம்.." தங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள் தருகிறேன்" என்றார்.

உடனே விசுவாமித்திரர்" நான் யாகம் செய்ய உள்ளேன்." அந்த யாகத்தை தாடகை,சுபாகு போன்ற அசுரர்கள் அழிக்க உள்ளனர்.இவர்களிடமிருந்து யாகத்தைக் காப்பாற்ற உன் பிள்ளை ராமனை என்னுடன் அனுப்பு என்றார்.

"எனது மகனை அனுப்புவதா, அவன் சிறுவன்.நான் வேணுமென்றால் உங்களுடன் வந்து யாகத்தை காத்து அருளுகிறேன்." என்றார்.

அதற்கு விசுவாமித்திரர்.."தசரதா வாக்கு மீறக்கூடாது" நீ எது கேட்டாலும் தருகிறேன் என்றாய்.நீ எனக்கு வேண்டாம், ராமன் தான் வேண்டும்." என்றார்.

வசிஷ்டர் தசரதனிடம்" ராமனை அவருடன் அனுப்பிவை. இதனால் பல நன்மைகள் உண்டாகும் என்று சொல்ல,ராமனையும் லட்சுமணனையும் விசுவாமித்திரருடன் காட்டுக்கு அனுப்பினார் மன்னன்

ராமனும்,லட்சுமணனும் விசுவாமித்திரருடன் சென்றனர்.பசி,தாகம் இல்லாமல் இருக்க பலை,அதிபலை என்ற மந்திரத்தை விசுவாமித்திரர் அவர்களுக்கு உபதேசித்தார்..

சரயு நதிக்கரையில் அவர்கள் தூங்கினர்.பின் அவர்களை அழைத்து செல்கையில் வழியில் தாடகைஎனும் அரக்கி வழிமறித்தாள்.

விசுவாமித்திரர் அவள் ஒரு அரக்கி அவளைக் கொல் என்றதும் ஒரே பாணத்தில் தாடகியை வதம் செய்தார் ராமன்.

Wednesday 23 November 2022

பாலகாண்டம்



 1.இராமன் பிறந்தான்.

உலகத்திலேயே முதல் காவியமாக சொல்லப்படுவது இராமாயணம் ஆகும்.

"ராமா"என்ற சொல் மோட்சத்தை தரக்கூடியதாக உள்ளது.

இராமாயணம் என்றாலே இராமன் இருக்குமிடம் எனப்பொருள்.

இட்சுவாகு வம்சத்தில் பிறந்தவன் ராமன்.உயர்ந்த குணங்களோடு கூடிய இராமரின் சரித்திரத்தை சிறுவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும்.

இட்சுவாகு வம்சத்தின் மகரிஷிகளுக்கு இணையானவன் தசரதன்.

அவனுக்கு மூன்று மனைவிகள் இருந்தனர்.அவர்கள் கோசலை,கைகேயி,சுமித்திரை ஆகியவர்கள்.

தசரதன் தனக்கு மகன்கள்  இல்லை என்று வருத்தப்பட்டான்.

அதற்காக ரிஷ்யசிங்கர் என்ற மகரிஷியின் தலைமையில் யாகம் செய்தான்.

யாகத்தின் முடிவில்,அக்னி தேவன் பாயசம் நிறைந்த பொற்கலசத்துடன் தோன்றினான்.அக்னிதேவனின் ஆணைப்படி பாயசத்தை தன் மூன்று மனைவியருக்கும் வழங்க அவர்கள் கருவுற்றனர்.

இராவணன்,கும்பகணன் போன்ற அசுரர்களால் உலகம் அழிந்தது.இராவணன் பல அரிய வரங்களைப்பெற்று விளங்கினான்.அவன் மனிதர்கள் யாரையும் மதிப்பதில்லை..ஆகவே மனிதனைத்தவிர மற்ற எல்லா உயிர்களிடத்தும்,ஆயுதங்களாலும்,தேவர்களாலும் அழியாத வரம் பெற்று வாழ்ந்தான்.

மனிதர்கள் செய்யும் யாகம்,தவம் இவற்றால் தேவர்கள் திருப்தி அடைகின்றனர். இதனால் பூலோக மக்களை தேவர்கள் வாழ்த்துகின்றனர்.தர்மங்களுக்கு அழிவு நேரும்போது இறைவன் அவதரிக்கிறான் இராவணன்,கும்பகர்ணர்களை அழிக்க மகாவிஷ்ணு மனித வடிவில் அவதரித்து அரக்கர்களை அழித்து மனித வர்க்கத்தை காப்பாற்ற எண்ணினார்.

தனக்கு துணையாக தேவர்களை...அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப பிறப்பெடுக்கச்செய்தார்.பகவான் மகாவிஷ்ணு தசரதனின்மனைவி கோசலைக்கு மகனாக அவதரித்தார்.

கைகேயிக்கு பரதனும்.சுமித்திரைக்கு இலட்சுமணனும்,சத்துருக்கனும் பிறந்தனர்,

பகவான் அவதாரத்தை தேவர்கள் அனைவரும் மலர்தூவி வாழ்த்தினர்.

நான்கு குழந்தைகளும் பிறந்து வளர்ந்தனர்.

Tuesday 22 November 2022

முன்னுரை

 இராமாயணம் மிகப்பெரிய காவியம்.

அதனைசுருக்கி முழுக்கதை அம்சத்துடன் சிறுவர்களுக்காக  எழுதியுள்ளேன்.

இதனைப்படித்து சிறுவர்கள் பயன் பெற வேண்டும் என்று அவா.

இராமாயணம் ஆறு காண்டங்களைக் கொண்டது,

அவை

1.பால கண்டம்

2.அயோத்யா கண்டம்

3.ஆரண்ய காண்டம்

4.கிஷ்கிந்தா காண்டம்

5.சுந்தர காண்டம்

6.யுத்த காண்டம்


இவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்


39. ராமர் பட்டாபிஷேகம்

  இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான். ராம...