Wednesday 11 January 2023

39. ராமர் பட்டாபிஷேகம்

 



இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான்.

ராமனின் வருகையால் பரதன் மிகவும் மகிழ்ந்தான்.நாடே விழாக்கோலம் பூண்டது.விபீஷணன்,சுக்ரீவன் ஆகியோர் பரிவாரங்களுக்கு விருந்து மற்றும் சன்மானங்களை வழங்கினர்.

குபேரனிடமிருந்து ராமர் கைபற்றிய புஷ்பக விமானத்தில் ராமர்,சீதை,லட்சுமணன்,சுக்ரீவன்,விபீஷணனாகிய அனைவரும் பரத்வாஜ் ஆசிரமத்தை வந்து அடைந்தனர்.ராமனின் வனவாசம் பரத்வாஜ் ஆசிரமத்தில் தான் ஆரம்பமானது.அங்கேயே வனவாசம் முடிந்தது

ராமன் செய்த செயற்கரிய செயல்களை கேட்டு ஆனந்தம் அடைந்தார்.அங்கு அனைவரும் ஒரு நாள் தங்கி அடுத்த நாள் அயோத்தி நகருக்கு சென்றனர்.

பரதன் ராமனின் பாதுகைகள் இரண்டையும் தன் தலை மீது வைத்திருந்து மரியாதையுடன் நின்றுகொண்டு பின் ராமனிடம் பாதுகைகளை ஒப்படைத்தான்.

இதன் மூலம் ராமரிடம் ராஜ்ஜியத்தை ஒப்படைக்க சமமானது.சகோதரர்கள் ஒருவரைஒருவர் கட்டித்தழுவினர்.

சுக்ரீவனையும் விபீஷணனையும் ராமன் பரதனுக்கு அறிமுகப்படுத்தினார்.

தாய்மார்கள் மூவரின் பாதங்களைத்தொட்டு வழிபாடு செய்தார்.பரதன்,இதுவரை ராமனுக்கு பதிலாக அரசாட்சி செய்துவந்ததாகவும்,ஒரு குறையும் இல்லாமல் மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதையும் தெரிவித்து இன்றுடன் அரசாட்சி பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்று கூறி ராமரின் பாதத்தில் விழுந்து அரசாட்சியை ஒப்படைக்கிறார்.

ஒரு நல்ல நாள் குறிக்கப்பட்டு, புனித நதிகளில் இருந்து நீர் கொண்டுவரப்பட்டது.

அரசாங்க முறைப்படி அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.வசிஷ்டர் புனித தீர்த்தங்களால் ராமரை அபிஷேகம் செய்து சூரியவம்சத்திற்குரிய ரத்தினங்கள் இழைக்கப்பட்ட கிரீடத்தை ராமனின் சிரசில் வைத்து பட்டாபிஷேகம் செய்தார்.

வின்னோர்கள் வாழ்த்தினர்.குடிமக்கள் மகிழ்ந்தனர்.

ராமராஜ்ஜியம் சிறப்பாக நடந்தது.

ஶ்ரீ ராம ஜெயம்

முற்றும்.

No comments:

Post a Comment

39. ராமர் பட்டாபிஷேகம்

  இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான். ராம...