Wednesday 30 November 2022

6. வனவாசம் செல்லுதல்



கைகேயி தன் அரண்மனைக்கு தசரதன் அழைத்ததாக கூறி ராமனை வரச்சொன்னாள்.ராமன் வந்து கைகேயின் காலில் விழுந்து ஆசிபெற்று தன் தகப்பனாரைக் காண வந்துள்ளதாகக் கூறினான்.‘உன் தகப்பனார் உன்னை காண விரும்பவில்லை.ஆனால் அவர் கூறச்சொன்னதை சொல்கிறேன்.அதன்படி நீ நடக்கவேண்டும்.’ என ராமனிடம் கூறினாள்.

‘நீங்கள் ஆணையிட்டால் ..அதையே தந்தையின் ஆணையாக ஏற்று அதன்படி செயல்படுவேன்’ என்றான் ராமன்.

‘ராமா’…நீ மரவுரி தரித்து 14 வருடம் வனவாசம் மேற்கொள்ளவேண்டும்.பரதன் இந்நாட்டை ஆளவேண்டும்.; இதுவே உன் தந்தையின் கட்டளை’ என்றாள்.

‘ தாயே உங்கள் கட்டளையை உடனே கடைபிடிக்கிறேன்’ என்று கூறி தன் தாய் கௌசல்யா தேவியிடம் சென்று …..வனவாசம் செல்ல தந்தையார் உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறி ஆசி பெற்றான்.

‘தந்தையின் வாக்கை  நிறைவேற்றுவது  மகனின்  கடமை.எனக்கு விடை கொடுங்கள்’ என்று வேண்ட..கௌசல்யா தேவி கண்ணீருடன் அவனுக்கு ஆசிகள் வழங்கினார்.

ராமன் அம்மாவிடம் தந்தையை  கண்ணும் கருத்துமாக  பார்த்துக்கொள்ளச் சொன்னார்.ராமன் பிரிவை தாங்காத லட்சுமணனும் உடன் வருவதாகக் கூறினான்.ராமன் இருக்கும் இடமே அயோத்தி என சீதாவும் உடன் வருவதாக கூறினாள்

சீதைக்கு எவ்வளவோ புத்திமதிகள் கூறியும் கேட்காமல் வனவாசம் செல்ல உடன்பட்டாள்.

ராமன்,லட்சுமணன்,சீதை என மூவரும் புறப்பட்டனர்.

அவர்கள் ஏறிய ரதம் வேகமாக அயோத்தியை விட்டு சென்றது.

வனவாசத்தின் முதல் இரவை தமஸா  நதிக்கரையில் கழித்தனர்

தசரத சக்கரவர்த்தி துயரில் மூழ்கியவராய்’ கைகேயி’ இனி நான் உன்க்கு உரியவனில்லை.பரதன் என் ஈமச்சடங்குகளை செய்யக்கூடாது’ என்றார்.

அத்துடன் அவர் நா அடங்கிவிட்டது.

தசரதனை கௌசல்யாவின் மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.

தன் வாழ்நாள் முடிவை எதிர்பார்த்து தசரதன் படுத்துக் கிடந்தான்.







No comments:

Post a Comment

39. ராமர் பட்டாபிஷேகம்

  இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான். ராம...