Wednesday 11 January 2023

39. ராமர் பட்டாபிஷேகம்

 



இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான்.

ராமனின் வருகையால் பரதன் மிகவும் மகிழ்ந்தான்.நாடே விழாக்கோலம் பூண்டது.விபீஷணன்,சுக்ரீவன் ஆகியோர் பரிவாரங்களுக்கு விருந்து மற்றும் சன்மானங்களை வழங்கினர்.

குபேரனிடமிருந்து ராமர் கைபற்றிய புஷ்பக விமானத்தில் ராமர்,சீதை,லட்சுமணன்,சுக்ரீவன்,விபீஷணனாகிய அனைவரும் பரத்வாஜ் ஆசிரமத்தை வந்து அடைந்தனர்.ராமனின் வனவாசம் பரத்வாஜ் ஆசிரமத்தில் தான் ஆரம்பமானது.அங்கேயே வனவாசம் முடிந்தது

ராமன் செய்த செயற்கரிய செயல்களை கேட்டு ஆனந்தம் அடைந்தார்.அங்கு அனைவரும் ஒரு நாள் தங்கி அடுத்த நாள் அயோத்தி நகருக்கு சென்றனர்.

பரதன் ராமனின் பாதுகைகள் இரண்டையும் தன் தலை மீது வைத்திருந்து மரியாதையுடன் நின்றுகொண்டு பின் ராமனிடம் பாதுகைகளை ஒப்படைத்தான்.

இதன் மூலம் ராமரிடம் ராஜ்ஜியத்தை ஒப்படைக்க சமமானது.சகோதரர்கள் ஒருவரைஒருவர் கட்டித்தழுவினர்.

சுக்ரீவனையும் விபீஷணனையும் ராமன் பரதனுக்கு அறிமுகப்படுத்தினார்.

தாய்மார்கள் மூவரின் பாதங்களைத்தொட்டு வழிபாடு செய்தார்.பரதன்,இதுவரை ராமனுக்கு பதிலாக அரசாட்சி செய்துவந்ததாகவும்,ஒரு குறையும் இல்லாமல் மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதையும் தெரிவித்து இன்றுடன் அரசாட்சி பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்று கூறி ராமரின் பாதத்தில் விழுந்து அரசாட்சியை ஒப்படைக்கிறார்.

ஒரு நல்ல நாள் குறிக்கப்பட்டு, புனித நதிகளில் இருந்து நீர் கொண்டுவரப்பட்டது.

அரசாங்க முறைப்படி அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.வசிஷ்டர் புனித தீர்த்தங்களால் ராமரை அபிஷேகம் செய்து சூரியவம்சத்திற்குரிய ரத்தினங்கள் இழைக்கப்பட்ட கிரீடத்தை ராமனின் சிரசில் வைத்து பட்டாபிஷேகம் செய்தார்.

வின்னோர்கள் வாழ்த்தினர்.குடிமக்கள் மகிழ்ந்தனர்.

ராமராஜ்ஜியம் சிறப்பாக நடந்தது.

ஶ்ரீ ராம ஜெயம்

முற்றும்.

38. அக்னி பிரவேசம்

   



    சீதையை ராமனிடம் அழைத்து வந்தனர்.ராமன்,சீதையிடம் ராவணன் உன்னை தூக்கிசென்றான்.பல மாதங்கள் சிறைப்படுத்தி வைத்திருந்தான்.அவன் உன்னை காமத்தோடு பார்த்தான்.அதனால் நீ தீட்டு பட்டு விட்டாய்.அதனால் என்னால் உன்னோடு சேர்ந்து இருப்பது இயலாது.ராவணன் மரணம் என்னால் நிகழவேண்டும் என்பது விதி.அதற்காக அவனிடம் போரிட்டேன்.இனி நீ உனக்கு விருப்பமான இடம் தேடிச் செல்’ என்றான்.

எவ்வளவுதான் சீதை பாதுகாப்பாக இருந்தாலும் உலகம் பழி சொல்லுமே ‘நான் என் மனிதத்தன்மையை நிரூபிக்க இக்கணமே தீயில் என் உயிரை விடுகிறேன்’ என்றாள்’ சீதை.ராமர்,லட்சுமணனை தீ மூட்டி கொடுக்கும்படி சொன்னார்.சீதை,’ அக்னிதேவா,நான் பத்தினி என்பது உண்மையானால் நீயே சாட்சியாக இருப்பாயாக.இல்லாவிடில் என்னை பொசுக்கிவிடு’ என்று கூறி அக்னியை மூன்று முறை வலம் வந்து அதில் புகுந்தாள்.

அப்போது அனைவரும் கண்ணீர் விட அக்னிதேவன் தோன்றினான்.அவன் ராமனிடம் ‘சீதை தூய்மையானவள் அவளை உன்னிடம் ஒப்படைக்கிறேன்.அவளை நீ ஏற்பதே முறை என்றான்.சீதை தீக்குண்டத்திலிருந்து வெளியே வர,ராமன் சீதையை ஏற்றான்.

வானவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.ராமன்,சீதாராமனாக காட்சி அளித்தார்.சொர்கத்திலிருந்தும் தசரதர் வந்திருந்து ராமனை வாழ்த்தினார்.பின் அவர் ராமனிடம் ‘அயோத்தி சென்று ஆட்சி புரி’ என்று கூறினார்.

தந்தை சொல் மிக்க ராமன் அயோத்திக்கு வருவதை அனுமன் மூலம் சொல்லி அனுப்பினார்.

Tuesday 10 January 2023

37. ராவணன் இறந்தான்




 ராவணனின் தலை வெட்ட மற்றொரு தலை முளைத்தது.விபீஷணன் தன் அண்ணன் ராவணனை அவன் மார்பில் குறிவைத்து அம்பு எய்தும்படி கூறினான்.ஏனெனில் அவனது மார்பில்  அமிர்த கலசம் உள்ளது.அதனை தகர்க்கவேண்டும்.அப்போதுதான் ராவணன் மரணம் சம்பவிக்கும்.இப்போது ராவணனை கொல்வது தவிர வேறு வழியில்லாததால் பிரம்மாஸ்திரத்தை ராமன் ராவணன் மீது பிரயோகித்தான்.அது ராவணனின் மார்பில்  துளைத்து சென்று மீண்டும் ராமனிடமே வந்தடைந்தது.ராவணன் கீழே விழுந்து இறந்தான்.

தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.விபீஷணன் அரக்கர்கள் கூட்டத்தில் பிறந்தவன் எனினும், அவனிடம் தேவ குணங்கள் நிரம்பி இருந்தன.தன் அண்ணனின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை.கதறி அழுதான்.ராமன் அவனை தேற்றினான்.ராவணனுக்கு விபீஷணன் ஈமச்சடங்குகளை செய்து முடித்தான்.பிறகு ராமன்  எண்ணப்படி இலங்காபுரிக்கு  விபீஷணனை அரசனாக நியமித்து முடிசூட்டினான்.இதுவரை நடந்த நிகழ்ச்சிகளை ராமன் சீதைக்கு அனுமன் மூலம் கூறி அனுப்பினான்.

சீதை மிகவும் சந்தோஷமாக இருந்தாள்.தான் இப்போதே ராமனுடன் இணங்கி இருக்க ஆவலுடன் உள்ளதாக தெரிவித்தாள்.சீதையை அரண்மனையில் உள்ள பெண்கள் நீராட்டி அழகிய ஆடை அணிவித்து ராமனிடம் ஒப்படைக்க விரும்பினார்கள்.

ஆனால் சீதையோ தன் தவக்கோலத்திலேயே ராமனிடம் வருவதற்கு விரும்பினாள்.

Monday 9 January 2023

36. ஆதித்ய ஹிருதயம்

 



ராம,ராவண யுத்தம் உக்ரமான வகையில் நடந்தது.லட்சுமணன்,ராவணனின் சாரதியை தாக்கி கொன்றான்.அதேவேளையில் ரதத்தில் பூட்டியிருந்த குதிரைகளை விபீஷணன் கொன்றான்.ராவணன் மூர்க்கத்தனமாக ரதத்திலிருந்து குதித்து விபீஷணனின் மீது சக்தி வாய்ந்த ஆயுதத்தை பிரயோகித்தான்.லட்சுமணன் திடீரென்று இடையில் பாய்ந்து அந்த ஆயுதத்தை தானே ஏற்றிக்கொண்டான்.லட்சுமணன் உணர்ச்சியின்றி தரையில் விழுந்தார்.

ராமன், லட்சுமணனின் நெஞ்சில் இருந்த அம்பை திறமையுடன் பிடுங்கி எடுத்தான்.தம்பியின் முகத்தைப்பார்த்தான்.உயிர் இருக்கும் அறிகுறி இல்லை.உடன் ராமன் கதறி அழுதார்.லட்சுமணன் இல்லாத வாழ்க்கை பொருளற்றதாக திகழ்ந்தது.

மருத்துவர் சுசேனன் அவ்விடத்திற்கு ஓடி வந்தார்.லட்சுமணன் உயிர் துறக்கவில்லை மயக்கத்தில் உள்ளான் என்று அறிவித்தார்.உடனே அனுமனை ஹிமாலய பர்வதம் சென்று அரிய மூலிகைகளை கொண்டு வரச்செய்தார்.அனுமனும் பறந்து சென்று மூலிகைகளை கொண்டுவர லட்சுமணன் பழைய நிலையை அடைந்தார்.ராமனும் மகிழ்ந்தார்.

ராவணன் அழகியஉயர்ந்த ஒரு ரதத்தை எடுத்துக்கொண்டு அரிய அஸ்திரங்களுடன் மிகுந்த ஆரவாரத்துடன் வந்தான்.ராமன் தரையில் நின்று போர் செய்ய வேண்டியிருந்தது.

தேவர்களுக்கு அரசனான இந்திரன் தெய்வீக வல்லமை வாய்ந்த ஆயுதங்களோடு அமைந்த ரதத்தை மதலி என்ற சாரதியோடு அனுப்பிவைத்தார்.அந்த ரதம் ராமனுக்கு எதிரே கீழே இறங்கி வந்தது.

இதற்கு இடையில் அகஸ்திய முனிவர்’ஆதித்ய ஹிருதயம்’ என்ற மந்திரத்தை ராமனுக்கு உபதேசித்தார்..அவரிடம் இருந்த அரிய சூஷ்திரங்களை அவனிடம் ஒப்படைத்து அதனை பயன்படுத்தும் முறைகளையும் கூறினார்.

ராம,ராவண யுத்தம் பயங்கரமாக இருந்த்து.அஸ்திர,சாஸ்திரங்கள் யாவும் பயன்படுத்தபட்டன.ராவணனுடைய ஆயுதங்கள் அனைத்தையும் தாக்கினார்.இறுதியில் ராவணனின் தலையை கொல்ல தீர்மானித்தார்.

Thursday 5 January 2023

34. மயில் ராவணன்




யுத்தத்தில் தன் போர் வீரர்களை இழ்ந்து கொண்டிருந்த ராவணனுக்கு,ராமனால் தானும் கொல்லப்படுவோமோ என்ற பயம் வந்தது.எனவே அவன் பாதாள  உலக அரசனான மயில்ராவணனை வரவழைத்தான்.பிரம்மனைக்குறித்து தவம் இருந்து அரிய வரங்களைப் பெற்றவன் மயில்ராவணன்.மாயா ஜாலங்கள் செய்வதில் நிபுணன்.

தன்னை வணங்கிய  மயில்ராவணனிடம் தன்  நிலைமையை எடுத்துக்கூறி,ராம லட்சுமணரை அழிக்குமாறு உத்திரவிட்டான்ராவணன் கட்டளையை சிரமேற்கொண்ட மயில்ராவணன்,ராம.லட்சுமணர்களை பாதாள லோகத்திலுள்ள காளிதேவிக்கு பலி கொடுப்பதாக சபதம் சொல்லி புறப்பட்டான்.

இதை விபீஷணனின் ஒற்றர்கள் அறிந்து சுக்ரீவனிடம் சொல்லி..ராம லட்சுமணரை பாதுகாக்கும்படி கூறினார்.அனுமன் ராமலட்சுமணர்களைபர்ணசாலையின் உள்ளே அமர்த்தி,தன் வாலினால்பர்ணசாலையின் சுற்றிலும் கோட்டை அமைத்து அதன் மீது அமர்ந்து காவல் காத்தான்.

விபீஷணனின் உருவமெடுத்து மயில்ராவணன் அனுமனிடம் வந்தான்.ராம லட்சுமணரை பார்த்து வருவதாக கூறி உள்ளே சென்றான்.தனது மாய சக்தியால் அவர்களை சிறிய பொம்மைகளாக்கி மறைத்துக்கொண்டு வெளியே வந்தான்.

‘மாருதி ஜாக்கிரதை’ மயில்ராவணன் என் உருவத்தில்கூட இங்கு வர முயற்ச்சிப்பான் என அனுமனை எச்சரித்துவிட்டு புறப்பட்டான் சுக்ரீவன்.பாதாளலோகம் வந்த மயில்ராவணன்,ராம லட்சுமணர்களை நிஜ உருவம் பெறச்செய்து அவர்களை சிறைவைத்தான்.

மயில்ராவணன் சென்றபிறகு உண்மையான விபீஷணர் அனுமனிடம் வந்தார்.’இப்போதுதானே வந்துபோனீர்கள் என்று அவரிடம் அனுமன் கேட்க,வந்தது நான் இல்லை என்றார் விபீஷணன்.

அனுமன் பதற்றத்துடன் பர்ணசாலைக்குள் சென்று பார்க்க,அங்கே  ராம லட்சுமணர்கள் இல்லை.இது மயில்ராவணன் வேலை என்று உணர்ந்தார்.

அவரிடம் மயில்ராவணன் இருப்பிடத்தையும் அவன் தம்பி மஹிராவணன் பற்றியும் கூறினார்.

விபீஷ்ணன் அனுமனிடம் ஐந்து வண்டுகள் ஒரு பெட்டியில் இருக்கும் ரகசியத்தையும்,அந்த வண்டுகளிடம் தான் மயில்ராவணனின் உயிர் இருப்பதையும் கூறினார்.

அதன்படி பாதாளஉலகம் சென்ற ஆஞ்சனேயர் அங்கிருந்து காளி கோயிலுக்குள் நுழைந்து தேவியின் உருவத்துக்குப் பின்னால் மறைந்து கொண்டார்.

35. மயில் ராவணன் மறைந்தான்




 மயி ல்ராவணனும்,மஹிராவணனும் காளிக்கு பலி கொடுப்பதற்காக ராம லட்சுமணரை அழைத்து வந்தனர்.

அப்போது,மயில்ராவணா,உனது பக்திக்கு மெச்சினேன்.நீ மஹிராவணனுடன் என் பலிகளை உள்ளே அனுப்பு. நீ வரவேண்டாம்’ என்று காளி பேசுவது போல குரல் கொடுத்தான் அனுமன்.

அதன்படி ராமலட்சுமணர்களுடன் மஹிராவணன்  பாதாளலோகத்துக்குள்  நுழைந்ததும்,ஆஞ்சனேயர் விஸ்வரூபம் எடுத்து அவனை அடித்து கொன்றான்.பிறகு தான் கொண்டுவந்த வில்,அம்புகளை ராமலட்சுமணரிடம் கொடுத்து மயில்ராவணனுடன் போர் செய்யும்படி கூறினான்.

நெடுநேரமாகியும் மஹிராவணன் திரும்ப வராததால் சந்தேகம் கொண்ட மயில்ராவணன் கதவை திறந்து உள்ளே நுழைந்தான்.ராமலட்சுமணர்களை தன் தோள்களில் அமர செய்து மயில்ராவணன் மீது அம்புகளை தொடுக்க அனுமன் உதவினான்.அனுமன் மயில்ராவணனுடன் மாயப் போர் செய்தான்.

போரை ஒரு முடிவுக்கு கொண்டுவர எண்ணிய அனுமன் ராமலட்சுமணரை கீழே இறக்கிவிட்டு ,அவர்களிடம் போரை தொடரசொல்லிவிட்டு மயில்ராவணனின் உயிர் மூலமான வண்டுளைத் தேடி புறப்பட்டான் அனுமன்.

விபீஷணன் சொன்னப்டி ஏழு கடல்கள் கடந்து ஒரு தீவை அடைந்தான்.அங்குள்ள அரக்கர்களை அழித்து தடாகம் ஒன்றில் தாமரைப் பூவிற்குள் இருந்த விஷம் கக்கும் வண்டுகள் அடங்கிய பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

ஐந்து வண்டுகளையும் ஒரே நேரத்தில் கொல்வதால் மட்டுமே தனக்கு மரணம் நிகழவேண்டும் என்று பிரம்மனிடம் வரம் வாங்கியிருக்கான் மயில்ராவணன்.’

அப்படி முடியாவிட்டால் கொல்ல முயல்பவரே மடிய வேண்டும்.அசரீரி மூலம் இதை அறிந்த அனுமன் வானரம்,நரசிம்மா,கருடன்,வராகம்,குதிரை முகங்களோடு விசித்திர உருவெடுத்தான்.இதைக்கண்ட மயில்ராவணன் தடுமாறினான்.

அனுமன் அவனிடம்; அரக்கனே நீ அழியும் நேரம் வந்துவிட்டது’ என்று கூறி ,பெட்டியை திற்ந்து ஐந்து வண்டுகளையும்,ஐந்து முகங்களின் வாலினால் ஒரே நேரத்தில் கடித்து துப்பினான்.வண்டுகள் இறந்தன

மயில் ராவணன் கீழே விழுந்து துடிதுடித்து இறந்தான்.பிறகு ராம்லட்சுமணர்களை தன் தோள்களில் தூக்கிக்கொண்டு அனுமன் இலங்கையை அடைந்தான்.

Monday 2 January 2023

33. கும்பகர்ணன் போர்

 



இப்போதுதான் ராவணன் இலங்கைக்கு வந்துள்ள ஆபத்தை உணர்ந்தான்.கும்பகர்ணனை உறக்கத்திலிருந்து எழுப்ப உத்தரவிட்டான்.

சங்கு,தப்பட்டம்,பறை,மோளம் என பல கருவிகளின் சப்தத்தைக் கேட்டும் கும்பகர்ணன் எழுந்திருக்கவில்லை.யானைகளை வைத்து மிதிக்க வைத்தனர்.அவன் மெல்ல கண் திறந்து பார்த்தான்.ராவணன் அழைத்ததாக கூறினர்.

அவனுக்கோ ஒரே பசி….இறைச்சி,மது என மலை போல் படைத்தனர்.அவற்றை உட்கொண்டு ராவணன் முன் வந்து நின்றான்.

ராவணன் தன் மகன் இந்திரஜித் உட்பட அனைவரும் மாண்டதைக்கூறி …ராம லட்சுமணர் மீது போர் செய்து அழிக்குமாறு கூறினான்

காமவெறியால் துன்பம் நேர்ந்தது. அன்றே சீதையை ராமரிடம் ஒப்படைத்திருந்தால் இந்நிலை வந்திருக்குமா என்று கேட்டான்.ஆனாலும் செஞ்சோற்றுக்கடனுக்காக போர் புரிகிறேன் என்று கூறினான்.

ராம லட்சுமணர் கும்பகர்ணனைப் பார்த்தனர். விபீஷணர்,கும்பகர்ணன் ராவணனின் தம்பியும்,என் தமையனும் ஆவான் என்று கூறி அவனது போர் திறமைகளைப் பற்றி விளக்கினான்..

கும்பகர்ணன் போர்வீரர்களை கை விரலகளில்  பிடித்து நசுக்கினான்.வானர சேனைகள் மிகவும் பயந்து அருகில் செல்லவே அஞ்சியது.கும்பகர்ணன் விரைவில் வந்து படைகளை அழித்த வண்ணம் இருந்தான்.

இனி அவனை விட்டுவைத்தால் வானர சேனை முழுவதும் அவன் அழித்துவிடுவான் என எண்ணி,கும்பகர்ணன் மீது ராமர் பிம்மாஸ்திரத்தை பிரயோகித்தார்..கும்பகர்ணன் மார்பில் அது பாய..அப்படியே மலை சாய்ந்து விடுவது போல கீழே விழுந்து இறந்தான்.வானர சேனை மிகவும் மகிழ்ந்தது.


39. ராமர் பட்டாபிஷேகம்

  இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான். ராம...