Monday 2 January 2023

33. கும்பகர்ணன் போர்

 



இப்போதுதான் ராவணன் இலங்கைக்கு வந்துள்ள ஆபத்தை உணர்ந்தான்.கும்பகர்ணனை உறக்கத்திலிருந்து எழுப்ப உத்தரவிட்டான்.

சங்கு,தப்பட்டம்,பறை,மோளம் என பல கருவிகளின் சப்தத்தைக் கேட்டும் கும்பகர்ணன் எழுந்திருக்கவில்லை.யானைகளை வைத்து மிதிக்க வைத்தனர்.அவன் மெல்ல கண் திறந்து பார்த்தான்.ராவணன் அழைத்ததாக கூறினர்.

அவனுக்கோ ஒரே பசி….இறைச்சி,மது என மலை போல் படைத்தனர்.அவற்றை உட்கொண்டு ராவணன் முன் வந்து நின்றான்.

ராவணன் தன் மகன் இந்திரஜித் உட்பட அனைவரும் மாண்டதைக்கூறி …ராம லட்சுமணர் மீது போர் செய்து அழிக்குமாறு கூறினான்

காமவெறியால் துன்பம் நேர்ந்தது. அன்றே சீதையை ராமரிடம் ஒப்படைத்திருந்தால் இந்நிலை வந்திருக்குமா என்று கேட்டான்.ஆனாலும் செஞ்சோற்றுக்கடனுக்காக போர் புரிகிறேன் என்று கூறினான்.

ராம லட்சுமணர் கும்பகர்ணனைப் பார்த்தனர். விபீஷணர்,கும்பகர்ணன் ராவணனின் தம்பியும்,என் தமையனும் ஆவான் என்று கூறி அவனது போர் திறமைகளைப் பற்றி விளக்கினான்..

கும்பகர்ணன் போர்வீரர்களை கை விரலகளில்  பிடித்து நசுக்கினான்.வானர சேனைகள் மிகவும் பயந்து அருகில் செல்லவே அஞ்சியது.கும்பகர்ணன் விரைவில் வந்து படைகளை அழித்த வண்ணம் இருந்தான்.

இனி அவனை விட்டுவைத்தால் வானர சேனை முழுவதும் அவன் அழித்துவிடுவான் என எண்ணி,கும்பகர்ணன் மீது ராமர் பிம்மாஸ்திரத்தை பிரயோகித்தார்..கும்பகர்ணன் மார்பில் அது பாய..அப்படியே மலை சாய்ந்து விடுவது போல கீழே விழுந்து இறந்தான்.வானர சேனை மிகவும் மகிழ்ந்தது.


No comments:

Post a Comment

39. ராமர் பட்டாபிஷேகம்

  இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான். ராம...