Thursday 5 January 2023

35. மயில் ராவணன் மறைந்தான்




 மயி ல்ராவணனும்,மஹிராவணனும் காளிக்கு பலி கொடுப்பதற்காக ராம லட்சுமணரை அழைத்து வந்தனர்.

அப்போது,மயில்ராவணா,உனது பக்திக்கு மெச்சினேன்.நீ மஹிராவணனுடன் என் பலிகளை உள்ளே அனுப்பு. நீ வரவேண்டாம்’ என்று காளி பேசுவது போல குரல் கொடுத்தான் அனுமன்.

அதன்படி ராமலட்சுமணர்களுடன் மஹிராவணன்  பாதாளலோகத்துக்குள்  நுழைந்ததும்,ஆஞ்சனேயர் விஸ்வரூபம் எடுத்து அவனை அடித்து கொன்றான்.பிறகு தான் கொண்டுவந்த வில்,அம்புகளை ராமலட்சுமணரிடம் கொடுத்து மயில்ராவணனுடன் போர் செய்யும்படி கூறினான்.

நெடுநேரமாகியும் மஹிராவணன் திரும்ப வராததால் சந்தேகம் கொண்ட மயில்ராவணன் கதவை திறந்து உள்ளே நுழைந்தான்.ராமலட்சுமணர்களை தன் தோள்களில் அமர செய்து மயில்ராவணன் மீது அம்புகளை தொடுக்க அனுமன் உதவினான்.அனுமன் மயில்ராவணனுடன் மாயப் போர் செய்தான்.

போரை ஒரு முடிவுக்கு கொண்டுவர எண்ணிய அனுமன் ராமலட்சுமணரை கீழே இறக்கிவிட்டு ,அவர்களிடம் போரை தொடரசொல்லிவிட்டு மயில்ராவணனின் உயிர் மூலமான வண்டுளைத் தேடி புறப்பட்டான் அனுமன்.

விபீஷணன் சொன்னப்டி ஏழு கடல்கள் கடந்து ஒரு தீவை அடைந்தான்.அங்குள்ள அரக்கர்களை அழித்து தடாகம் ஒன்றில் தாமரைப் பூவிற்குள் இருந்த விஷம் கக்கும் வண்டுகள் அடங்கிய பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

ஐந்து வண்டுகளையும் ஒரே நேரத்தில் கொல்வதால் மட்டுமே தனக்கு மரணம் நிகழவேண்டும் என்று பிரம்மனிடம் வரம் வாங்கியிருக்கான் மயில்ராவணன்.’

அப்படி முடியாவிட்டால் கொல்ல முயல்பவரே மடிய வேண்டும்.அசரீரி மூலம் இதை அறிந்த அனுமன் வானரம்,நரசிம்மா,கருடன்,வராகம்,குதிரை முகங்களோடு விசித்திர உருவெடுத்தான்.இதைக்கண்ட மயில்ராவணன் தடுமாறினான்.

அனுமன் அவனிடம்; அரக்கனே நீ அழியும் நேரம் வந்துவிட்டது’ என்று கூறி ,பெட்டியை திற்ந்து ஐந்து வண்டுகளையும்,ஐந்து முகங்களின் வாலினால் ஒரே நேரத்தில் கடித்து துப்பினான்.வண்டுகள் இறந்தன

மயில் ராவணன் கீழே விழுந்து துடிதுடித்து இறந்தான்.பிறகு ராம்லட்சுமணர்களை தன் தோள்களில் தூக்கிக்கொண்டு அனுமன் இலங்கையை அடைந்தான்.

No comments:

Post a Comment

39. ராமர் பட்டாபிஷேகம்

  இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான். ராம...